பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அஞ்சா நெஞ்சன் 93.

இந்திரசித்தன் பெருஞ்சேனையுடன் தேரின் மேல் வருவதை அநுமன் அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்நோக்கு கின்றான்.

"மூண்டுமுப் புரஞ்சுட முடுகும் ஈசனின்

ஆண்டகை வனைகழல் அநுமன் நோக்கினான்' "

(வனைகழல் - கட்டிய வீரக்கழல்)

தொலைவில் வரும்போதே அவனை இந்திரசித்தன் என அநுமன் ஊகித்து அறிகின்றான்; தனக்குள் இவனை வென்றுவிட்டால் அந்த இராவணன் தானும் அழிந்து விடுவதாக எண்ணுவன்; பிராட்டியையும் கொணர்ந்து விட்டுச் செல்வான்; அரக்கர்களும் செருக்கடங்கிக் கொடுமை ஒழிவர். இதனால் வரும் ஊதியம் () இந்திரனின் துன்பம் ஒழியும், (2) இலங்காபுரியும் இன்றே காவல் ஒழிந்ததாகிவிடும், (3) தானே அந்த இராவணனைக் கொன்றவனாகக் கருதப்படும் நிலை ஏற்படும்" என்று எண்ணுகின்றான்.

இந்திரசித்தனின் சதுரங்க சேனையும் அநுமனால் அழிந்துபடுகின்றது". அரக்கர்கள் ஏவிய ஆயுதங்கள் யாவற் றாலும் அநுமனின் திருமேனியை ஊறுபடுத்த முடியவில்லை. இந்திரசித்தன் எய்த அம்புகள் யாவும் பழுதுபட்டொழி கின்றன. "வாரும் வாரும் என்று அழைக்கின்ற அநுமன்மேல் முறுவலும் வெகுளியும் வீங்க வருகின்றான், இந்திரசித்தன்.

வந்தவன் தன் கைவிரலால் வில்லின் நாணியைத் தெறித்துப் பேரொலியை எழுப்பினான். அநுமனும் அதற்கு மேலாக அந்த வில்லின் நாணியும் அற்றுப் போகும்படி தன் வீரத்தோள்களைத் தட்டி ஒலி எழுப்பினான்." இந்திரசித்து அதுமனை நோக்கி, "நீ மிகவும் சமர்த்தன். நினக்கு நிகரான சமர்த்தர்கள் இவ்வுலகில் இலர்; நீ எல்லோருடனும் மாறுபடுவதற்கு மிகவும் வல்லவன்; ஆயினும் இன்று நின் ஆயுள் எல்லைக்கு முடிவு எல்லையாகும் என்று வீரவாதம் புரிகின்றான். அநுமன் அதற்கு இளைத்தவனா? எதிர்த்து

39. கந்தர. பாசப். 24

40. சுந்தர. பாசப். 26, 27

41. சுந்தர. பாசப். 29, 30, 31, 32 42. சுந்தர. பாசப். 26, 27