பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 அண்ணல் அநுமன்

இந்திரசித்தனை நோக்கி, "கொடியவர்களே, உங்கள் வாழ்நாளுக்கு முடிவும். அரக்கர்களாய் உலகினை நலிகின்ற உங்கள் கொள்கைக்கு முடிவும், உங்கள் கொடிய தொழிலுக்கு முடிவும், உங்கள் ஆயுதங்கட்கு முடிவும் இப்பொழுது வந்துவிட்டன; அதற்கு உரிய திறமையைக் கொண்டே இங்கு வந்துள்ள என் தோளுக்கு முடிவு சிறிதும் உண்டாகாது”என்று அநுமனும் பதிலுக்கு வீரவாதம் புரிகின்றான்."

மேகநாதன் அநுமன்மீது 'சரமாரியாக அம்புகளை எய்ய, அவன் யோக பலத்தால்,

"சிறிய தாய்சொன்ன திருமொழி

சென்னியில் சூடி நெறியின் நின்றதன் நாயகன்

புகழென நிமிர்ந்தான்." (சிறிய தாய் - கைகேயி; சென்னி - தலை; நெறி - நல் ஒழுக்கம், நிமிர்தல் - உயர்ந்து வளர்தல்) என்றவாறு பேருருவம் கொள்ளலானான். அதனைக் கண்ட மேகநாதன்,

'பாக மல்லது கண்டிலன்

அதுமனைப் பார்த்தான்

மேக நாதனும் மயங்கினன்

ஆம்என விய்ந்தான்" என்றவாறு வியப்பும் திகைப்பும் உள்ளவன் ஆனான்.

அநுமன் இந்திரசித்தனின் தேர்க்குதிரைகளையும் அழிக்க, அவன் வேறொரு தேர் ஏறி அநுமன்மீது அம்புகளைப் பொழிகின்றான். அநுமன் பாய்ந்து இந்திர சித்தனின் வில்லை முரிக்கின்றான். உடனே அவன் வேறொரு சிறந்த வில்லை எடுத்துக்கொண்டு அம்புமாரி பொழிய, அநுமன் அவற்றின் தாக்குதலால் சிறிது தளர்வு எய்துகின்றான். உடனே அயர்ச்சி தீர்ந்து ஒரு மரத்தினால் இந்திரசித்தனின் தலையில் அடிக்கின்றான். அவன்

43. கந்தர. பாசப். 38, 39 44. சுந்தர. பாசப். 41, 42