பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 அண்ணல் அநுமன்

திறத்தை வியந்து கொண்டாடும் நிலையில், அநுமன் அருகிலிருந்த ஒரு மராமரத்தைப் பறித்துக் கையால் சுழற்றி எறிய, அது சாரதியை வீழ்த்திப் பல அரக்கர்களையும் கொன்றொழிக்கின்றது. வேறொரு சாரதி அந்த இடத்தைப் பெற்ற நிலையில், இராவணன் நூறு அம்புகளை அநுமன் உடலில் பாய்ச்சி அவனைத் தளர்வுறச் செய்துவிடுகின்றான்' (2 குத்துப் பரிமாற்றம் : முதற்போரில் இலக்குவனும் இராவணனும் மோதுகின்றனர். அதனைத் தவிர்க்க நினைக்கின்றான், அநுமன். வீரவாதத்துடன் ஓங்கி நிற்கின்றான்; இராவணனை நோக்கிப் பேசுகின்றான் : "மலையை யொத்த தோள் வலிமையுடையவனே, என் தோள் வலிமையினால் என் ஒற்றைக் கையைத் தூக்கி யான் குத்துவேன்; நீ இறவாமல் இருப்பாயேயானால், நீ பின்பு என்னை உன்னுடைய கைத்தல வரிசைகளினால் வலிமையோடு குத்துவாய்; அதனால் நான் இறவாவிட் டாலும் உன்னோடு எதிர்த்துப் பொரேன்" இராவணன் அநுமன் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்ளுகின்றான்.

முதலில் அநுமன் குத்துகின்றான். அநுமன் மிக ஆரவாரித்து, இராவணன் தேரிலே விரைந்து ஏறி, கண்முழுதும் தீப்பொறி சிந்த, ஆரத்தோடு பொருந்திய கவசத்துடனே உடல் பொடிபட்டுச் சிந்தும்படி அவ்விராவணனின் பெரிய மார்பில் தன் கையினால் விசையாகத் தன் முழு வலிமையையும் பயன்படுத்தி எதிர் நின்று குத்துகின்றான். விளைவு : இராவணன் கண்களி னின்று நெருப்புப் பொறிகள் சிந்தின; முழு மூளைகள் தயிர் போலச் சிந்தின; அவன் மார்பில் ஒடிந்து பதிந்திருந்த திசை யானைகளின் தந்தங்கள் முதுகின் வழியாகச் சிந்தின; கவசத்தில் திகழ்ந்த இரத்தினங்கள் தெறித்துப்போய் வீழ்ந்தன. நெஞ்சில் பிராணவாயு வீசுவதனின்றும் ஒடுங்க அவன் தள்ளாடிச் சலித்திடுகின்றான். பிறகு, விரைவில் தெளிகின்றான்; பிறகு, அதுமனைப் புகழ்ந்து பேசுகின்றான்;

54. யுத்த முதற்போர் - 133 - 138 55. முதற்போர். 166