9 அற்புத மனிதர்
சிறந்த குழந்தை எழுத்தாளர். ‘அன்புப் பணிக்கு ஒரு அன்னை தெரசா’, ‘தென்னை மரத் தீவினிலே’ ஆகிய நூல்களுக்கு ஏ.வி.எம்மின் தங்கப் பதக்க வெள்ளிப் பதக்க விருதுகள் பெற்றவர். இரண்டு தடவை இலக்கியச் சாதனைப் பரிசு பெற்றவர். நீலமணியின் ‘மாஸ்டர் ராஜா’ என்ற சிறுவர் நாவல் தொலைக்காட்சித் தொடராக 13 வாரங்கள் ஒளிபரப்பானபோது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சின்னச் சின்னப் பெருமைகளைக் கூடப் பெரிதாய்க் கருதி நிறைவடையும் பெருந்தன்மை நிறைந்த முதிர்ந்த மனம் அவருடையது.
தி. ஜானகிராமன், எம்.வி. வெட்கட்ராம் போன்ற எழுத்தாளர்களுக்கு நெருங்கிய நண்பராயிந்தவர் கே.பி. நீலமணி. நீலமணி நெடுங்காலம் வாசகர்கள் மனத்தில் ஒளிவீசிக் கொண்டே இருப்பார். தற்பெருமை, அகம்பாவம் போன்றவற்றை முற்றிலும் துறந்துவிட்ட அவரது எளிமையும், அடக்க உணர்வும் இன்றைய இளம் எழுத்தாளர்களால் பின்பற்றப்படுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.