உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்றியுரை

இந்நூலை எழுதியுள்ள அமரர் திரு. கே.பி. நீலமணி அவர்கள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கத்தையும், இலங்கைவாழ் தமிழர்களின் கண்ணீர்க் கதையும் அந்த பயங்கரச் சூழலில் பரிதவிக்கும் குழந்தைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய ‘தென்னை மரத் தீவினிலே’ என்ற நூலுக்கு குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிப் பதக்கத்தையும் “கவிமணியின் கதை"க்காக இலக்கியச் சிந்தனைப் பரிசையும் பெற்றவர்.

தமிழ் நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கும், தமிழிசைக்கும் பெருந்தொண்டாற்றிய சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக தெளிவாக, அழகான நடையில், காலஞ்சென்ற எனது தந்தையார் திரு. கே.பி. நீலமணி அவர்கள் எழுதிய இந்நூலை எனது "லியோ பதிப்பகத்தின் மூலம் முதல் நூலாக வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்நூலுக்கு சிறப்பானதொரு ‘அணிந்துரை’ எழுதி வழங்கிய கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்களுக்கும், வாழ்த்துரை எழுதி ஆசி வழங்கிய சிறந்த எழுத்தாளர் திரு. திலீப்குமார் அவர்களுக்கும், எனது தந்தையாருக்கு நினைவு அஞ்சலி எழுதிய, பத்திரிகையாளர், எழுத்தாளருமான டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்