பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17 அற்புத மனிதர்


இந்நகரத்தின் வளங்களையும், சிறப்புக்களையும் பற்றி-

சேரர் குலச் செம்மலாகிய இளங்கோ அடிகள் இயற்றியுள்ள சிலப்பதிகாரத்திலும், பிற தமிழ் நூல்கள் பலவற்றிலிருந்தும் விரிவாய் அறியலாம்.

இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் என்னும் நூல்: இந்த காவிரிப் பூம்பட்டினத்தில் சிறப்புடன் வாழ்ந்த கோவலன் - அவனுடைய மனைவி கற்புக் கரசியாம் கண்ணகி- இவர்களுடைய வரலாற்றினை விரிவாய் எடுத்துரைக்கின்றது.

இவ்விருவரும் தனவணிகர் மரபில் தோன்றியவர்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்தில் ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றன.

காலப்போக்கில் நகரத்தார் திருமணங்களில் இன்று சிறு சிறு மாறுதல்கள் ஏற்பட்டிருப்பினும் -

சிலப்பதிகாரத்தில் காணப்படும் திருமண முறைகள்; திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம் நடத்த ஏற்பாடு செய்து கொடுத்தல் ஆகிய அந்நாளைய நடைமுறை மரபுகளை நகரத்தார், இன்றும் அப்படியே பின்பற்றி வருகிறார்கள்.

காவிரிப் பூம்பட்டினம் என்னும் புகார் நகரத்திலிருந்து பிற்காலத்தில் பாண்டி நாட்டில் குடியேறியமையால், ‘நகரத்தார்’ என்று இவர்கள் பெயர் வழங்கப் பெற்றனர்.

அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் -
‘காரைக்கால் அம்மையாரும்’-