பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 20



3. அண்ணாமலை

தென்னிந்தியக் கிழக்குக்கரைப் பகுதியிலுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தையும்; புதுக்கோட்டையை அடுத்துள்ள நிலப் பரப்பையும் ஒருங்கே கொண்டது; செட்டி நாட்டுப் பகுதியாகும்.

தளராத உழைப்பும் தணியாத இறை உணர்வும்; விடா முயற்சியும் கொண்ட, ‘நகரத்தார்’ என்னும், தன வணிகப் பெருமக்களின் தாயகமாகத் திகழ்ந்தது இப்பகுதி.

இங்குள்ள கானாடு காத்தானில், வளமான வாணிகத்திற்கும்; வற்றாத வள்ளன்மைக்கும் பெயர் பெற்ற குலத்தினரான, வெ.சா.ராம.மு. முத்தையா செட்டியாருக்கும், குணவதியான அவரது மனைவி மீனாட்சி ஆச்சியாருக்கும் நான்காவது திருமகனாக -

1881-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று, மூல நட்சத்திரத்தில் அண்ணாமலைச் செட்டியார் பிறந்தார்.

இவரது பெற்றோரான முத்தையா செட்டியார் - மீனாட்சி தம்பதியினருக்கு முறையே, ‘சிதம்பரம்; இராமசாமி, அருணாசலம்; அண்ணாமலை’, என்னும் நான்கு மகன்களும், மூன்று புதல்விகளும் பிறந்தனர்.

முத்தையா செட்டியார், வாணிகத் தொழிலோடு, பொதுநலத் தொண்டுகளிலும் ஈடுபட்டு வந்தார். அவற்றுள், சிதம்பரத்தில் அமைந்துள்ள தர்ம சத்திரமும் ஒன்றாகும்.