பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 22



ஆசிரியரும் பகுதி நேர ஊழியராகவே, பிற்பகல் வேளையில் வந்து போவார்.

இரண்டு ஆண்டுகள் தமிழில் ஆரம்பப் பாடங்களை அண்ணாமலை அங்கு நன்கு கற்றுத் தேர்ந்தார்.

முதலில் கானாடுகாத்தானிலும், பிறகு கரூரிலும் கல்வி பயின்ற அண்ணாமலைக்கு இயற்கையிலேயே தமிழின் மீதும், ஆங்கிலக் கல்வியின் மீதும் மிக்க ஆர்வமிருந்தது.

பிற்காலத்தில் ஆங்கிலக் கல்வியின் அவசியம் பற்றி நன்கு அறிந்திருந்த தந்தை, தன் மகனின் ஏழாவது வயதிலிருந்து தனியாக வீட்டிலிருந்தபடி ஆங்கிலக் கல்வி பயில ஏற்பாடு செய்தார்.

முதலில் உள்ளூரிலிருந்த ஒரு போஸ்ட் மாஸ்டரிடமும்; பின்னர் தந்தி அலுவலகத்தில் பணி புரிந்து வந்த ஆங்கிலப் புலமை மிக்க டி.பி. பொன்னுசாமி பிள்ளை என்பவரிடமும் அண்ணாமலை ஆங்கிலக் கல்வி பயின்றான்.

இளம் வயதிலிருந்தே அண்ணாமலைச் செட்டியார் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார்.

முறையான பள்ளிகளும், கல்வித் திட்டங்களும் இல்லாத அந்தக் காலத்தில் விளையாட்டுத் துறையைப் பற்றி யாரும் அக்கரை கொண்டவர்களாக இருந்ததில்லை.

இந்த சமயத்தில் -