பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 24



கானாடு காத்தானிலிருந்து, இரண்டு மைல் தொலைவிலுள்ள பள்ளத்துரில் செல்வந்தராக எம்.ஏ.ஆர்.எம்.பி. பழனியப்ப செட்டியார் விளங்கி வந்தார்.

அவரது புதல்வி சீதாவை அண்ணாமலைக்காகப் பெற்றோர், பெண் பார்த்து வந்தனர். குடும்பத்தினர், அனைவருக்கும் பிடித்துப் போகவே, திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

1895-ம் ஆண்டு அண்ணாமலைச் செட்டியாருக்கும்; சீதாவிற்கும் திருமணம் நான்கு நாட்கள் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

அப்போது அண்ணாமலைச் செட்டியாருக்குப் பதினான்கு வயது -

சீதாவிற்கு பதினைந்து வயது.

ஏராளமான உறவினர்களும், நண்பர்களும், திரளாகத் திருமணத்திற்கு வந்திருந்து பரிசும், பொருட்களும் வழங்கி, மணமக்களை வாயார வாழ்த்தினர்.

கனவுபோல் திருமண நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்டது; அண்ணாமலை செட்டியாரின் நினைவெல்லாம் -நன்கு தொழில் புரிந்து தந்தையைப் போல் பேரும் புகழும் பெற்று முன்னுக்கு வர வேண்டியதைப் பற்றியே சிந்தித்த வண்ணமிருந்தது.

நாட்கள் உல்லாசமாக ஓடிக் கொண்டிருந்தன-

திருமணமான பிறகு அண்ணாமலை செட்டியார் தன் மனைவியோடு தனிக் குடித்தனம் நடத்த துவங்கினார்.

இதனால் -