பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25 அற்புத மனிதர்


அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போனார் என்று பொருளல்ல.

கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தாலும் திருமணத்திற்குப் பிறகு - மணமக்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்து பெற்றோரே முன்னின்று தனிக் குடித்தனத்திற்கு ஏற்பாடு செய்வது நகரத்தாரின் வழிவழியாக வந்த மரபு.

தொழிலை அக்கரையோடு செய்து; தனக்கென்று தனியாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும்-

தன் குடும்பத்தில் ஏற்படுகிற கஷ்ட நஷ்டங்களுக்குத் தாங்களே முழுப் பொறுப்பேற்று - குடும்பத்தைச் செம்மையாகக் கொண்டு செல்லவும் -

இளம் வயதிலிருந்தே - புது மணமக்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிப் படிப்பை ஓரளவுடன் நிறுத்திக் கொண்டாலும்- பலருடன் பழகிப் பொது அறிவை அண்ணாமலைச் செட்டியார் வளர்த்துக் கொண்டே வந்தார்.

சிறுவயது முதல் வாணிகத் தொழிலில் தந்தையாருக்கு உதவியாக இருந்து வந்ததின் மூலம், தொழிற் கல்வியிலும் அவர் சிறந்து விளங்கினார்.

அத்துடன், அறத்துறையிலும் - தர்ம காரியங்களிலும், தந்தையாரைப் போலவே ஆரம்ப காலத்திலிருந்தே ஆர்வம் மேலோங்கி நின்றது.