பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27 அற்புத மனிதர்4. ஒரு புதிய ஆரம்பம்

பள்ளிப் பருவத்திலிருந்தே தந்தையாருடன் சேர்ந்து, தொழில் நுணுக்கங்களையும், பணம் பெற்று வரவுக் கணக்குகளையும்; கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கலான நடைமுறைகளையும் பற்றித் தெளிவாக அறிந்து வைத்துக் கொண்டிருந்தார் அண்ணாமலைச் செட்டியார்.

கணிதத்தில் அவருக்கு இருந்த அபார திறமை; பிற்காலத்தில் வாணிகத் தொழில் புரியும் போது பெரிதும் கை கொடுத்தது.

உரிய காலத்தில் தமக்குரிய சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட அண்ணாமலைச் செட்டியார், வாணிகத்திலேயே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தனித் தொழில் செய்யத் துவங்கனார்.  அதற்குரிய துணிவும்; தன்னம்பிக்கையும் அவரிடம் மேலோங்கி நின்றது.

கடல் கடந்து ஈழம், கடாரம், பர்மா, மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கெல்லாம் சென்று, வாணிகத் துறையில் பேராற்றலையும்; பெருந்திறனையும் வளர்த்துக் கொண்டார்.

1911-ம் ஆண்டில் ஒரு முறையும் 1935-ம் ஆண்டில் ஒருமுறையுமாக, இரண்டு முறை லண்டனுக்குச் சென்று வந்தார்.