பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 30



5.கடமை முடிந்தது

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் முத்தையா செட்டியாரின் உடல் நிலை சமீப காலமாக மோசமாகிக் கொண்டே வந்தது.

ஆயினும் அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. வியாபாரத்தில் ஈடுபட்டு வரும், தன் மகனுக்கு, கவலையை உண்டாக்கக் கூடாது என்பது அவர் எண்ணம்.

அண்ணாமலையைத் தன் விருப்பப்படி நன்றாக உருவாக்கி விட்டமைக்காக மகிழ்ந்தார். அவரது மனம் எப்போதும் தம் அருமை மகனது சிறப்பியல்புகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அண்ணாமலை செட்டியாரின், அறிவும் திறமையும் அவரை பெருமை கொள்ளச் செய்தன.

இளமையில் தான் கற்ற கல்வியை மேலும் மேலும் அரிய பல நூல்களை வாங்கிப் படித்து அவர் அபிவிருத்தி செய்து கொண்டவர்.

நாள்தோறும் இந்து பத்திரிகை படிக்கத் தவறுவதில்லை.

அப்போதெல்லாம், தன் மகனை உரக்கப் படிக்கச் சொல்லி, தன் மகன் ஆங்கிலம் படிக்கும் அழகை ரசித்துப் பூரித்துப் போவார்.