பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31 அற்புத மனிதர்



அண்ணாமலை எங்கு சென்றாலும் திருக்குறளை எடுத்துச் செல்ல தவறமாட்டார்.

பிறரிடம் பேசும் போது, சில குறள்களை, தக்க சமயத்தில் பயன்படுத்தி மேற்கோள் காட்டிப் பேசுவார்.

சுயமாக முயற்சி செய்தும்; தானே பல நூல்களைப் வாங்கிப் படித்தும்; ஆங்கிலத்தில் மிகத் தெளிவாகவும், வரையறுத்தும் கூறும் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர்.

அறிவாற்றலிலும், பரம்பரை வாணிகத் தொழிலிலும் தன் மகன் வேகமாக வளர்ந்து வருவதை கண்ணாரக் கண்டபோது உள்ளபடியே உள்ளம் பூரித்துப் போவார்.


திருச்சிராப்பள்ளி நகரமன்றவரவேற்பு -பெரியார்திரு.ஈ. வெ. இராமசாமி நாயக்கர் அவர்கள் அரசர்அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துதல்