பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 326. தந்தையின் பிரிவு


வியாபார நிமித்தம் வெளியூர் சென்றிருந்த அண்ணாமலைச் செட்டியார் படுத்தபடி இருக்கும் தன் தந்தையாரின் உடல் நிலையைக் கண்டு பதறிப் போனார்.

தன் தந்தையை அந்த நிலையில் விட்டு விட்டு வெளியூர் சென்றதன் செயலுக்காக வருந்தினார்.

உடனடியாக மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்தார். முத்தையா செட்டியாரின் உடல்நிலையைப் பரிசோதித்த டாக்டர், அண்ணாமலைச் செட்டியாரை தனியே அழைத்து வியாதி முற்றி, முத்தையா செட்டியார் கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதை விளக்கி; மருந்தும் மாத்திரைகளும் எழுதிக் கொடுத்தார்.

அவற்றை உடனடியாக வாங்கிவந்து தந்தையாரை உட்கொள்ளும்படிச் செய்தார்.

டாக்டர் எழுதிய மருந்து, மாத்திரைகளை வேளை தவறாமல் கொடுத்து அருகிலிருந்தே கண்ணை இமை காப்பது போல், வேண்டிய பணிவிடைகள் செய்து வந்தார்.

டாக்டர் தினம் இருவேளை வந்து, மருந்தும் மாத்திரைகளும் மாறி மாறி எழுதிக் கொடுத்து விட்டுப்போனார்.

இறுதியில், ஒருநாள் அவரது உடல் நிலை மிக மோசமாகி; தன் அருமை மகன் அண்ணாமலையின்