பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37 அற்புத மனிதர்அண்ணாமலைச் செட்டியார் தம் அருமை மகனை மிகவும் கண்ணும் கருத்துமாய் வளர்த்து ஆளாக்கினார். தந்தையை போன்றே, உரிய தோற்றப் பொலிவு: அறிவுத் திறன், உயர் பண்பு முதலிய எல்லா நற்குணங்களும் வாய்க்கப் பெற்று முத்தையா செட்டியார் விளங்கினார்.

அண்ணாமலைச் செட்டியாரின் மூத்த அண்ணனும்; முத்தையாச் செட்டியாரின் பெரியப்பாவுமான சிதம்பரம் செட்டியார் செல்வாக்கு மிக்கவர். கானாடு காத்தானில் அஞ்சல் நிலையம் அமையச் செய்தவர்.

தம் இனத்தவர் வாழும் ஊர்களுக்குச் சென்று வர ஒழுங்கான பாதைகளை உருவாக்கினார். இவரது தொண்டு, நகரத்தார் நாட்டளவில் நின்றது என்று கூறலாம்.

சிதம்பரச் செட்டியாரின் தம்பியும், முத்தையாச் செட்டியாரின் இளைய பெரியப்பாவுமான இராமசாமிச் செட்டியார் சிறந்த கல்விமானாக விளங்கினார்.

தில்லை நடராஜரிடம் மிகுந்த பக்தி பூண்டவர். 1908 முதல் 1916-ம் ஆண்டு வரை, சிதம்பரம் நகரமன்றத் தலைவராகவும் 1910 முதல் 1913 வரை, சென்னை மேல் சபை உறுப்பினராகவும் இருந்தார்.

வணிக மரபினரில் மேல் சபை உறுப்பினராக முதன் முதலில் இருந்தவர் இவரே. இதற்காக இவரைப் பாராட்டி நகரத்தார் விருந்துபசாரம் செய்தனர்.

அக்கால கட்டத்தில் சட்டசபை உறுப்பினர்களின் பெயர்களைக் கூறும் போது - ‘கனம் பொருந்திய’,