பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 38


என்னும் என்ற சிறப்பு அடைமொழி சேர்த்துக் கூறுவது வழக்கமாக இருந்தது. மேலும், இராமசாமிச் செட்டியார் சிதம்பரம் தாலுகா போர்டின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

இவர் செய்த, பல பொது நலப்பணிகளைக் கண்டு மகிழ்ந்த சென்னை அரசாங்கம் இவருக்கு, திவான் பகதூர்”, என்கிற சிறப்புப் பட்டத்தினை வழங்கியது.

இவர் சிதம்பரம் நகரமன்றத் தலைவராக இருந்தபோது, அந்நகரத்திற்கு குடிநீர்த் தேக்கம் நிறுவினார். அதற்கு அப்போதைய கவர்னராக இருந்த சர். ஆர்தர். லாலி என்பவர் அடிக்கல் நாட்டினார்.

அந்த விழாவில், சிறுவனாக இருந்த முத்தையாச் செட்டியாரும் கலந்து கொண்டார்.

விரைவிலேயே -

இராமசாமிச் செட்டியார், சிதம்பரத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளியையும் நிறுவினார். அது, சிதம்பரத்தில் சிறப்புடைய உயர்நிலைப் பள்ளியாகத் திகழ்ந்தது.

சிதம்பரம் கோயிலை புதுப்பித்து, அதற்கு அருகில் உள்ள, ‘திருவேட்களம்', என்னும் திருக்கோயிலையும் கட்டி, அதன் குடமுழுக்கு விழாவை 1915-ம் ஆண்டு நடத்தினார்.

அவ்விழாவில் அண்ணாமலைச் செட்டியார் தம் அருமைக் குமாரர் ராஜா முத்தையா செட்டியாருடன் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு 10 வயது.