பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39 அற்புத மனிதர்



முந்தைய தலைமுறையில், அண்ணாமலைச் செட்டியாரைப் போலவே, கல்விக்குப் பெரும் பொருள் வழங்கிய வள்ளல் பச்சையப்ப முதலியார்.

இருவரும் முற்போக்கு மனம் உடையவர்களாய் கல்விக்குக் காவலர்களாய் அவர்கள் காலத்தில் திகழ்ந்தார்கள்.

சிதம்பரத்தில், பல அறக்கட்டளைகளுக்கு, இருவரும் பெரும் பொருள் வழங்கியவர்கள்.

அண்ணாமலைச் செட்டியார், காரைக்குடி, நகரசபைத் தலைவராக இருந்து எண்ணற்ற பொதுநலப் பணிகளைச் சிறப்புறச் செய்தார்.


திருச்சி நகரமன்ற வரவேற்பில், ராணி லேடி மெய்யம்மை ஆச்சி அவர்களுக்கு, திரு வாட்டி சொக்கலிங்கம் அவர்கள் பொன்னாடை போர்த்துதல்