பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41. அற்புத மனிதர்


செய்ய முடியும் என்கிற கருத்துக்கு பல்லாண்டு காலமாக இருவருமே இசைந்து வரவில்லை.

இப்போதும் -

இது பற்றிய ஒரு மத்தியஸ்தத்துக்குத் தான் அண்ணாமலைச் செட்டியாரை சிலர் அழைத்து வந்தார்கள்.

தமது தந்தையார் காலத்திலிருந்தே அவர் தலையிட்டும் தீராத இந்த வழக்கை நாம் எப்படித் தீர்க்கப் போகிறோம், என்று எண்ணிக் கொண்டே சென்றார்.

அவர் எண்ணியது போலவே - நீண்ட நேரம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் இருவரும் எவ்வித மத்யஸ்தத் திற்கும் கட்டுப்படவில்லை. அண்ணாமலைச் செட்டியார் மனமுடைந்து போனார்.

இந்த சமயத்தில் -

அண்ணாமலைச் செட்டியாருக்குப் பேரன் பிறந்திருப்பதாகத் தந்தி வந்தது.

உடனே அவர் - வழக்கை அப்படியே விட்டுவிட்டு எல்லோரிடமும் விடைபெற்றுச் சென்றுவிட்டார். ஆனால்-

அண்ணாமலைச் செட்டியார் மனம் வருந்திச் சென்றதில் இருசாரருக்கும் ஏற்பட்ட துயரமும், அவருக்குப் பேரன் பிறந்த மகிழ்ச்சியில் பங்கு பெறவேண்டுமென்று ஏற்பட்ட ஆவலும், அவ்விரு அர்ச்சகர்களின் உள்ளத்திலும் ஒரு புதிய மாறுதலை கண நேரத்தில் ஏற்படுத்தியது.