பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 42


 சற்றைக்கெல்லாம் -

நடராஜர் கோவிலின் ஆலயமணி கம்பீரமாக முழங்கிக் கொண்டிருந்தது.

அண்ணாமலைச் செட்டியாரின் பேரனுக்கான அர்ச்சனையை, தீஷிதரும், பட்டாச்சாரியாரும் ஒரு சேர நிகழ்த்தினர்.

இருவரும் குழந்தைக்காக அர்ச்சனை செய்த பிரசாதம், பூ, பழம், கற்கண்டு முதலியவற்றை இரு தாம்பாளங்களில் ஏந்திக் கொண்டு, அண்ணாமலைச் செட்டியார் வீடு சென்று வாழ்த்தினார்கள். அவர் கூறியதை, இருவரும் ஏற்பதாகக் கூறினார்கள்.

குழந்தை மூலம் ஒரு வழக்கினைத் தீர்த்து வைத்த, தெய்வத்தின் திருவருளை எண்ணி அண்ணாமலைச் செட்டியார் நெகிழ்ந்து போனார்.

அதன்பிறகு காரியங்கள் வேகமாகச் செயல்பட்டன.

நடராஜரும், கோவிந்த ராஜப் பெருமாளும் முகம் திருப்பி நிற்காமல் -

ஒருசேர பக்தர்களுக்குக் காட்சிதரும் வகையில் விக்கிரகங்களைத் திருப்பி அமைப்பதற்கான உயர்ந்த பீடங்களை அண்ணாமலைச் செட்டியார் தம் செலவில் உருவாக்கிக் கொடுத்து,

காலம் காலமாகத் தீராதிருந்த ஒரு வழக்கிற்கான முடிவும் கண்டார்.

இந்தக் காரியம் தெய்வத்தின் திருவருளால் நிகழ்ந்தது என்பதில் அவருக்குச் சந்தேகம் எழவில்லை.