பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 46



பல்கலைக் கழகம் உருவாவதற்கு முன்பிருந்தே; கல்லூரியில் படித்தபடி தந்தைக்கு உதவியாக இருந்தார். இப்போது முழு மூச்சுடன் தந்தைக்கு அடுத்தபடியாக, கழக வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு பணியாற்றினார்.

பல்கலைக் கழகம் இடம் பெற்றுள்ள இடத்திற்கு ‘அண்ணாமலை நகர்’, என்கிற பெயர் சூட்டப்பட்டது.

பல்கலைக் கழக வேலைகள் துரிதமாக நடைபெற்று முடியும் தறுவாயில் இருந்தது. மாணவர் தங்கும் விடுதிகளையும், உணவு இல்லங்களையும் கட்டும் போது முத்தையா செட்டியார் உடனிருந்து தக்க ஆலோசனைகள் கூறிநவீன முறையில் உருவாக்கினார்.

பல்கலைக்கழக வேலைகள் பூர்த்தி அடைந்து அலங்கார வளைவுகள் வைத்தபோது பார்ப்பதற்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

குறிப்பிட்டதொரு முகூர்த்தத்தில் நல்லநாள் பார்த்து-

1929-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து பல்கலைக் கழகம் செயல்படத் துவங்கியது.

அதன் பிறகு விரைவிலேயே "முத்தையா செட்டியார் பாலிடெக்னிக்”கும் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொண்டது.

"அண்ணாமலைச் செட்டியார்” என்கிற ஒரு தனி மனிதரின் சாதனையால், உருவாகி நிற்கும் பல்கலைக் கழகம் இந்தியாவிலேயே இது ஒன்று தான்.

அண்ணாமலைச் செட்டியாரின் அரிய சாதனையைப் பாராட்டும் வகையில் அரசாங்கம் அவருக்கு, "ராவ் பகதூர்”, “திவான் பகதூர்”, “சர்” போன்ற பல பட்டங்களை அளித்து கெளரவித்தது.