பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 48



10. இசையும் கல்வியும்

கல்வியையும்; தமிழ் இசையையும் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தம் இரு கண்கள் போல் கருதினார்.

ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், தமிழ் இசையின்பால் அளவற்ற ஈடுபாடு உடையவர்கள். மற்ற எதனையும் விட இசைதான் அவரது பொழுது போக்காகும்.

குறிப்பாக தமிழ் இசை, பல்கலைக் கழகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெறவேண்டும் என்று விரும்பினார்.

அதனால் அண்ணாமலை நகரில் 1929-ம் ஆண்டு இசைக் கல்லூரி ஒன்றைத் துவக்கினார். தம் இறுதி மூச்சு உள்ளவரை தமிழ் இசையின் வளர்ச்சிக்கும்; அதன் புகழுக்கும் பாடுபட்டார்.

தமிழ் இசை மறுமலர்ச்சிக்கென, வழிமுறைகள் காண்பதற்காக, அண்ணாமலை நகரில் ஒரு மகாநாடு கூட்டினார்.

இசையைப் பொறுத்தவரை தென்னிந்திய மக்கள் பெருந்துணையாகக் கருதிய அண்ணாமலைச் செட்டியார், தமிழிசை வளர்ச்சிக்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவினார்.