பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49. அற்புத மனிதர்



தமிழ் இசை இயக்கத்திற்கும், ஆதன் ஆக்கத்திற்கும் பெருந்தொண்டாற்றிய ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களை தமிழுலகம் என்றும் பாராட்டும்.

புகழ் பெற்ற இசைக்கலைஞர்களை ஒன்று கூட்டி...

தமிழிசையில் மறைந்து போன அரிய செல்வங்களை வெளிக் கொணரவும்; தமிழ் இசை ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும்; தமிழ் இசைக் கீர்த்தனைகள் அடங்கிய நூல்களை வெளியிடவும்; தக்க ஏற்பாடுகளை அரசர் செய்தார்.

நாளும் பொழுதும், தமிழ், தமிழிசை, கல்விப் பணி, என்று அரசருக்கு, சென்னை பல்கலைக்கழகம் எல்.எல்.டி பட்டத்தினை வழங்கியது.

அண்ணாமலைப் பல்கழைக்கழகம் அரசரின் அரிய பணிகளைப் பாராட்டி டி.லிட் பட்டத்தினை வழங்கி பெருமை கொண்டது.

ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாருடன் இறைப் பணியிலும்; இசைப் பணியிலும் இணைந்து நின்று தொண்டாற்றியவர் அரசரின் மதிப்பிற்குரிய சர். ஆர். கே சண்முகம் செட்டியார் அவர்கள்.

தமிழிசை இயக்கத்தின் வளர்ச்சிக்கு சலியாது உழைத்தவர்கள், ராஜாசர் அண்ணாமலைச் செட்டியாரும் ஆர். கே. ஷண்முகம் செட்டியாரும் என்பதனை தமிழகம் மறக்க முடியாது.