பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 52



12. மீனாட்சி கல்லூரி

தொண்டு செய்யும் ஆர்வம் ஒருவர் உள்ளத்தில் எழுந்து விட்டால், ஆற்றொழுக்குப் போல் அது அவரை மேன்மேலும் அரிய பல தொண்டுகள் செய்ய இழுத்துச் சென்று கொண்டே இருக்கும்.

பலன் கருதாமல் பிறருக்குத் தொண்டு செய்வதில் பேரின்பம் இருக்கிறது.

இதில் ருசி கண்டவர்களின் வாழ்க்கை தொண்டு மயமாகவே விளங்கும் என்பதற்கு அண்ணாமலைச் செட்டியார் ஓர் உதாரணமாக விளங்கினார்.

அண்ணாமலை செட்டியாரின் சகோதரர் ராமசாமி செட்டியார் சிதம்பரத்தில் “ராமசாமி செட்டியார் டவுன் ஹைஸ்கூல் என்னும் பெயரில் உயர்நிலைப்பள்ளி ஒன்றை நிறுவி அது சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.”

1918 -ம் ஆண்டு ராமசாமி செட்டியார் நோய் வாய்ப் பட்டிருந்தார். மரணத் தருவாயில் அருகிலிருந்து அண்ணாமலைச் செட்டியாரிடம், “தன்னுடைய உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பினை மேற்கொண்டு; ஏற்று நடத்த வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

சகோதரரின் மரணத்திற்குப் பிறகு அண்ணாமலைச் செட்டியார், தவறாமல் அப்பள்ளிக்குச் சென்று, வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து வந்தார்.