பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53 அற்புத மனிதர்




பள்ளி சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அண்ணாமலைச் செட்டியார்; இப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தார்.

உடனடியாக ஒரு கல்லூரியின் தேவையைப் பற்றி அவர் மனம் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது.

சுற்று வட்டாரத்தில் கல்லூரிகள் இல்லை; அரசாங்கக் கல்லூரிகளின் போதனாமொழி அவருக்கு உடன்பாடாக இல்லை. இந்த சமயத்தில், மதுரையில் கல்லூரி துவங்குவது பற்றி தீவிரமாக எண்ணம் கொண்டிருந்தார்.

அப்போது மதுரையில் உருவாகிக் கொண்டிருந்த ஒரு கல்லூரியைப்பற்றி அறிந்து அதை அவர் ஏற்று நடத்த முன்வந்தார். அதற்காக 51 ஏக்கர் நிலமும் வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் அவர்களுடன் உடன்பாட்டிற்கு வர இயலாத நிலைமையில், மனம் உடைந்து கல்லூரிக்காக கொடுத்த 51 ஏக்கரை நன்கொடையாக அளித்துத் திரும்பினார். ஆயினும், புதுக் கல்லூரி துவங்குகிற எண்ண்ம் அவர் உள்ளத்தில் தீவிரமாகவே இருந்து வந்தது.

இரவெல்லாம் கண் விழித்து, இது பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது பொறி தட்டியது போன்று அவர் உள்ளத்தில் ஓர் யோசனை உதித்தது.

தான் ஏற்று நடத்திவரும் உயர்நிலைப்பள்ளியிலேயே கல்லூரியை உருவாக்கிவிட்டால் என்ன?- என்பது தான் அந்த யோசனை