பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 54



உடனே அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபாட்டார்.

உயர்நிலைப் பள்ளியை ஒட்டி இணைந்தாற் போல், மிகப் பெரிய ஹாஸ்டல் ஒன்று இருந்தது. அதனை கல்லூரியாகத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தார்; உடனே அதைச் செயல்படுத்தவும் செய்தார்.

24.6.1920-ம் ஆண்டு, சிம்பரத்தில் தன் அருமைத் தாயார் பெயரில் “மீனாட்சி ஆச்சி கல்லூரி”யை துவக்கினார்.

ஏராளமான பிரமுகர்களும், அறிஞர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள். அப்போது அந்த உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அண்ணாமலைச் செட்டியாரின் மகன் முத்தையா செட்டியாரும் உடன் இருந்து தந்தைக்கு வேண்டிய உதவிகள் எல்லாம் செய்தார்.

அதற்கடுத்த இரு ஆண்டுகளிலேயே மீனாட்சி கல்லூரிக்கு என்று ஒரு சிறப்பான கட்டிடத்தை, எல்லா வசதிகளுடனும், பழைய கல்லூரிக்கு அருகிலேயே கட்டி முடித்தார். கல்லூரி முதல்வராக கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி பணியேற்றார்.

1922 -ம் ஆண்டு நடைபெற்ற புதிய கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு முக்கிய பிரமுகர்களும்; செல்வந்தர்களும், அறிஞர்களும், திரளாக வந்து, அண்ணாமலைச் செட்டியாரின் சாதனையைப் பாராட்டிப் பேசினார்கள்.