பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55 அற்புத மனிதர்



கல்லூரி சிறப்பாக நடந்து கொண்டிருந்த போது - விரைவில் இக்கல்லூரியையே ஒரு பல்கலைக் கழகமாக்கிவிட்டால் என்ன? என்கிற எண்ணம் அடிமனத்தில் ஒரு கருவாக உருப்பெற்றிருந்தது.

அன்று விழாவிற்குத் தலைமை தாங்கி சர். கி. பி. இராமசாமி ஐயர் பேசிய போது

“இக்கல்லூரியின் விசாலமான சுற்றுப்புறம் ஒரு பல்கலைக் கழகம் உருவாவதற்கு ஏற்றதாக இருக்கிறது” என்று கூறினார்.

கல்வித்துறையில் புகழ் பெற்று விளங்கிய மற்றோர் அறிஞரான சி. இராமலிங்க ரெட்டி அவர்களும், அடுத்த கல்லூரி ஆண்டு விழவின்  போது சர். சி. பி. மட ராமசாமி ஐயர் கூறிய அதே கருத்தைக் கூறி; விரைவிலேயே இங்கு ஒரு பல்கலைக் கழகம் உருவாகினால், இதனால் பலரும் பயனடைவார்கள் என்று கூறினார்.

கல்லூரி துவக்கிய நாளிலிருந்து தான் எண்ணிக் கொண்டிருந்த அதே கருத்தை தன் உள்ளக்கிடக்கையை உணர்ந்தாற்போல இரு பேரறிஞர்களும் கூறிய போது, அண்ணாமலைச் செட்டியார், வியந்து போனார். இறைவனது, திருஉள்ளத்தை யார் அறிவார்? என்று எண்ணி தீவிரமாக பல்கலைக் கழகத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார்.

★★★