பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59 அற்புத மனிதர்



அவ்வாறு ஆர்வம் காட்டி துணை நின்றவர்களில், இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் திரு. எம்.ஏ.மாஸ்டர் அவர்களும் -

1932-ல் பர்மா - இந்தியா தூதுக் குழுவில் இருந்த ஹாஜி அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதற்கு முன்னதாக, அண்ணாமலை செட்டியார், அகதிகள், பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட இந்தோ - சீனாவிலிருந்த, இந்தியர்களின் நலனைப் பற்றிப் போராடினார்.

அவ்வரசு இந்தியர்களை, மாற்றந்தாய் மனப் பான்மையுடன் நடத்த முற்பட்டது.

1935-ம் ஆண்டில் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், பாரிஸ் நகரம் சென்று இந்தியர்களின் கோரிக்கைகளை நியாயமான முறையில் பிரெஞ்சு அரசிற்கு எடுத்துரைத்தார். அவ்வரசு இவர்களது குறைகளை விரைவில் தீர்த்து வைத்தது.

ஐரோப்பாவிலிருந்து அண்ணாமலைச் செட்டியார் அமெரிக்கா சென்றார். அப்போது அண்ணாமலைச் செட்டியாரின் மனைவி ராணி சீதை ஆச்சி அவர்களும், கணவருடன் ஐரோப்பா, அமெரிக்கா சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டார்.

அரசியல் அலுவல்களில் பெரிதும் மூழ்கி இருந்த காலத்திலும் கூட, அண்ணாமலைச் செட்டியார், அண்ணாமலை நகரை மறந்ததே இல்லை.