பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 62



அவர்களது அறியாமைக்காக வருந்த மட்டும் செய்தாரே ஒழிய அதற்காகத் தான் எடுத்த காரியத்தை நிறுத்தாமல் நிறைவேற்றி -

தூற்றியவர்கள் போற்றும்படி மாபெரும் வெற்றியும் பெற்றார்.

பல்கலைக்கழகம்-அதனைத் தோற்றுவித்தவருக்கு தன்னுடைய நன்றியுணர்வை புலப்படுத்திக் கொண்டது.

அறுபது ஆண்டுகள் நிறைவு என்பது வாழ்க்கைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தாலும்,

உழைப்பினின்றும் ஒரு சிறிதும் ஓய்வு கொள்ளாமல்; தம் உயிர் மூச்சின் இறுதிக் காலம் வரையில் தாம் ஆற்ற வேண்டிய அரிய பணிகள் பல இருக்கின்றன என்றே அரசர் கருதி வந்தார்.

வாழ்க்கை இவருக்குப் பல பாடங்களைக் கற்பித்தது.

அவர் பல தலைநகரங்களையும், அங்கு வாழ் மக்களையும்; அங்கு நிலவிய அரசுகளையும் கண்டு அவர்களிடம் அவர் ஆழமான சிறந்த நட்பினைக் கொண்டிருந்தார்.

அவர் சிறந்த நினைவாற்றல் வாய்ந்தவராய் விளங்கினார். உரையாடல் திறம் மிக்கவராய்த் திகழ்ந்தார்.

அவர் விருந்தோம்பும் முறை மன்னர்களுக்கே உரியதாக விளங்கியது.

செட்டி நாட்டில் அவர் அரண்மனைக்குச் செல்பவர்கள் அங்கு அறிவுசார்ந்த நல் அறிஞர்களையே சந்திப்பர்.