பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 64அரசரது இரண்டாவது குமாரராகிய ஆர். இராமநாதன் செட்டியார் சென்னை நகர ஷெரீப்பாகவும்:

1950-51-ல் சென்னை நகர மேயராகவும், பலமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும்; இந்திய செர்ல் வங்கியின் உறுப்பினராகவும் பல பொறுப்புகளை திறம்பட ஆற்றியவர்.

மூன்றாவது குமாரராகிய எம்.ஏ. சிதம்பரம் செட்டியார், தென்னிந்திய வர்த்தக சங்கத் தலைவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும்; சென்னை முன்னாள் மேயராகவும் விளங்கியவர்.

அண்ணாமலை அரசரின் புதல்வர்கள் மூவரும் தாம் பிறந்த குடும்பத்தின், மரபையும், பெருமையையும் கண்ணெனக் காத்து வருவதோடன்றி-

பொது வாழ்வில் பிறர் நலத்திற்கான பெருந் தொண்டுகளை ஆற்றியும் வருபவர்கள். தாம் ஒவ்வொருவரும் தமக்கென தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள துறைகளில் தங்கள் தங்கள் தனித் திறமைகளை பொறித்து வருகின்றனர்.