பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65. அற்புத மனிதர்



15. ராஜா. சர். அண்ணாமலை செட்டியார்

“ஓர் எளிய தொடக்கம் - பல அரிய பணிகளுக்கு அடிகோலுகிறது” - என்பதை அண்ணாமலைச் செட்டியார் அனுபவபூர்வமாக அனுபவித்தார்-

சகோதரரின் உயர்நிலைப் பள்ளியை ஏற்று நடத்த முன்வந்தது -

பள்ளியைக் கல்லூரியாக்கியது - கல்லூரி பல்கலைக் கழகமாக உருப்பெற்றது எல்லாமே, கனவில் நடந்து முடிந்தது போலிருந்தது.

பல்கலைக் கழக முதல் சென்ட் 1930-ம் ஆண்டு மார்ச் மாதம், 24-ம் தேதி, சென்னை மாநில ஆளுநர் ஹெச்.இ. சர். ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லி என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது.

பல்கலைக் கழகத்தில் இனி இடம் பெறப் போகும் விளையாட்டு, உடற் பயிற்சி வசதிகள் பற்றியும்; பல்வேறு திட்டங்கள் பற்றியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேறின.

அண்ணாமலைச் செட்டியாரின் இந்த மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையிலும்; அவரது அயராத கல்வித் தொண்டையும்; கொடைத் திறனையும் கவுரவிப்பதற்காகவும் -