பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 68



16. கவர்னர்கள் கண்ட
கானாடுகாத்தான்


எவ்வளவு பெரிய பிரமுகர்களானாலும், தனிப்பட்ட ஒருவர் இல்லத்திற்கு நாட்டையாளும் கவனர்கள் செல்கிற வழக்கமில்லை. ஆனால்-

அண்ணாமலைச் செட்டியாரின் அழைப்பை ஏற்று எண்ணற்ற கவர்னர்கள் அவரது இல்லத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள் என்றால், அதற்கு -

அவர்கள், அண்ணாமலைச் செட்டியார் மீது கொண்டிருந்த அளவுகடந்த அன்பையும், நன் மதிப்பையும் தவிர வேறு என்ன காரணம் கூற முடியும்?

அண்ணாமலைச் செட்டியார் அழைப்பிற்கிணங்கி-

1916-ம் ஆண்டு ‘லார்ட் பென்ட்லாண்ட்’, அண்ணாமலைச் செட்டியாரின், செட்டி நாடு அரண்மனைக்கு விஜயம் செய்து அவர் நிறுவ உத்தேசித்துள்ள, தாய் - சேய் மகப்பேறு மருத்துவ மனைக்கான அடிக்கல்லை நாட்டினார் -

1922-ம் ஆண்டு, லார்டு வெலிங்கடனும் லே வெலிங்டனும் விஜயம் செய்தார்கள்.

1926-ம் ஆண்டு, லார்டு கோஸ் சென் விஜயம் செய்தார்.