பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5 அற்புத மனிதர்


என்று உரை நடையின் நுட்பங்களை அறிந்தவர்களும், பொதுவாகவே பணிவு மிக்கவர்களும்தான் நல்ல சிறுவர்- எழுத்தை உருவாக்க முடியும். பத்திரிக்கைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றிருந்த நீலமணி, ஒரு சிறுவர் இலக்கியவாதிக்குரிய இந்த இலக்கணங்களை இயல்பாகவே கொண்டிருந்தார்.

தமிழ் நாட்டில் கல்வி மேம்பாட்டுக்கும், தமிழிசைக்கும் பெருந்தொண்டாற்றிய சர். அண்ணாமலை செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக தெளிவான, அழகான நடையில் திரு. நீலமணி அவர்கள் எழுதியுள்ளார். இந்த புத்தகம் சிறுவர்கள் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு உந்துதலை அளிக்கும் என்ற வகையில் எல்லோருடைய வரவேற்பையும் பெறும் என்று நம்புகிறேன். திரு. நீலமணி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த புத்தகத்தை அமரர் கே. பி. நீலமணியின் மூத்த மகள் திருமதி. காயத்ரி பாஸ்கர் அவர்கள் வெளியிடுவது பாராட்டுக்குரியது.

அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

திலிப் குமார்

21–1–2005