பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73. அற்புத மனிதர்


பெரும்பாலான தீய எண்ணங்களுக்கும் தீய செயல்களுக்கும் மூல காரணம்; ஆசையும், உள்ளத்தில் துய அன்பும்; இரக்கமும் இல்லாமையே!

பரம்பரையான செல்வந்தர் குடியிற் பிறந்த அண்ணாமலைச் செட்டியாருக்கு தூய மனமிருந்தது; திரளான செல்வமிருந்தது.

ஆனாலும்-

அபரிமிதமாகப் பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார்.

அயரா உழைப்பாலும்; அதிமதிநுட்பத்தாலும், திரை கடல் ஓடியும், திரவியம் திரட்டினார்.மலையத்தனை பொருள் குவித்தும், அவர் மனம் அமைதியுறவில்லை.

காரணம்-

நலிவுற்ற மக்களுக்காகவும், நாட்டிற்காகவும்; அறப்பணி, கல்விப் பணிகளுக்காகவும் பொருள் திரட்டி தாம் ஆற்ற வேண்டிய பணிகள், கடல் போல் அவர் கண் முன் விரிந்து நின்றன. இல்லாதவன் - பிறருக்கு உதவி செய்வதெப்படி? என்பதை உணர்ந்திருந்தார்.

உயரிய நோக்கமுடையதாயினும் எத்தகைய அரிய திட்டங்களுக்கும் அடிப்படைத் தேவை பொருளாதாரமே என்கிற அரிச்சுவடியை அவர் அறிய வைத்திருந்தார்.

அதனாலேயே-

தன் தொழில், பல துறைகளிலும் பெருக்கினார். நேர்மையான முறையில், மென்மேலும் பொருள் ஈட்டி-