பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அங்கே இங்கே


டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன்
இரண்டு மணிகளின் மறைவு


1. ஒளிவீசும் நீலமணி

பிரபல எழுத்தாளர் கே.பி. நீலமணி அண்மையில் காலமானார். புல்லின் இதழ்கள் நாவல் எழுதியவரின் உயிர், இதய நோய் காரணமாக ஒரு பூப்போல உதிர்ந்துவிட்டது. அன்பே வடிவான தம் மனைவி ஜானகி, இரு புதல்விகள் மற்றும் உறவினர்களை நிரந்தரமாக விட்டுப் பிரிந்துவிட்டார் அவர்.

'அன்பே வடிவான மனைவி' என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. தம் கணவர் மேல் அந்த மனைவிக்குத்தான் எவ்வளவு பாசம்! கடந்த சில ஆண்டுகளாக, கணவர் செல்லுமிடங்களுக்கெல்லாம் அவருக்குத் துணையாக உடன் சென்று கொண்டிருந்தார் அவர். இலக்கியக் கூட்டங்களுக்கும் சங்கீதக் கச்சேரிகளுக்கும் வள்ளுவரும் வாசுகியும் போல அவர்கள் இணைந்து வந்த காட்சி, பார்ப்பவர்கள் கண்ணுக்கு சுகம். பண்பட்ட எழுத்துலகத் தம்பதியர் வரிசையில் கே.பி. நீலமணி தம்பதியர் மறக்க முடியாதவர்கள். கே.பி. நீலமணி 36 ஆண்டுகளுக்கு மேல் தினமணி நாளிதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்.