பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அண்ணாவின் ஆறு கதைகள்


எனக்கு ஏற்றவன் யார் என்று நீங்கள் தேர்ந்தெடுக்கலாமல்லவா? என்று சாமர்த்தியமாகப் பதில் கூறுவாள் அதிசயம்"

“அது கிடக்கட்டும், அவளுக்கு உண்மையிலேயே யாரிடமும் காதல் ஏற்படவேயில்லையா?”

“நல்ல கேள்வி கேட்டு விட்டாய் போடி! எந்தப் பெண்ணுக்குத்தான் காதல் உண்டாகாது? எல்லோருக்கும் உண்டாகித்தான் தீரும். ஆனால் எத்தனை பெண்கள் தாங்கள் கொண்டுள்ள காதலை வெளியே சொல்லமுடியும்? சொல்லித்தான் என்ன பிரயோஜனம்? அவர்கள் இஷ்டப்படியா நடக்கும்? சேலைக்கும் நகைக்குமே இன்னமும், பெரியவர்கள் இஷ்டம் சட்டமாக இருக்கிறது. காதல் விஷயத்திலே, என்னடி செய்யமுடியும் பெண்கள்? கதைப் புத்தகம் படிக்கலாம்.”

“ஓஹோ, அதுதான் நீ கதை படித்துத் திருப்தி அடைந்து வருகிறாயோ?”

“போதுமடி சிரிப்பு, நான் கதை படித்துத் திருப்தி அடைவது இருக்கட்டும், நீ அதைக் கேட்டே திருப்தி அடைகிறாயல்லவா!”

“சரி, சரி, வாயாடாதே, கதையை முடி!!”

“எப்படியாவது கலியாணத்தை முடித்தாக வேண்டும் என்று துடித்தனர் மூவரும். இந்தச் சமயத்திலே, நீ கேட்டாயே, அதிசயத்திற்கு யார் மீதும் உண்மையான காதல் உண்டாகவில்லையா என்று அது ஏற்பட்டது. ஒரு சுந்தரமான புருஷன், அடுத்த இராஜ்யத்து இளவரசன், அவன் ஒரு நாள் அதிசயத்தைக் கண்டான்.”

“பஞ்சபாணம் பாய்ந்தது......”

“இல்லை! ஒரே ஒரு பாணம் பாய்ந்தது அதிசயத்தின் மீதல்ல, அவள் வளர்த்து வந்த மான் மீது, அரசகுமாரன் விட்ட பாணமல்ல, அவனைத் திருடன் என்று சந்தேகித்து