பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அண்ணாவின் ஆறு கதைகள்



“நான் ஒவ்வொருநாளும் அந்த வேலிப்பக்கம் நின்று கேட்டுக் களிப்பது வழக்கம்‘’ என்று லீலா கூறினாள். ”நீதானே, என் நாதத்துக்கே ஜீவன்! என் தீபத்தின் திரியே! வாழ்க்கையின் வழியே! இன்பத்தின் இருப்பிடமே! இருதய பீடத்தின் தேவியே! என்று அர்ச்சிக்கும்படி அவனுடைய ஆசிரியர்கள் — காதல் விளக்க ஏடுகள் — தூண்டின, பயனின்றி.

“தங்கள் குழலின் சக்தியை நான் பரீட்சிக்க விரும்புகிறேன்‘’ என்று லீலா சொல்லிவிட்டு, அவனுடைய பேச்சுக்கு எதிர்பார்த்து நின்றாள். சில விநாடி அவன் பேசவே இல்லை. ”இனிமேலா பரீட்சிக்க வேண்டும் என் குழலின் சக்தியை. ஜெமீன் இதோ, என் காலடியிலே கிடக்கிறதே, குழலின் “சக்திக்குப் பரிட்சை இனியுமா?” என்று எண்ணினான், பூரித்தான்.

“அடுத்த ஊரிலே” என்று ஆரம்பித்தாள் லீலா.

“என்னை விட அழகாகக் குழல் வாசிப்பவர் இருக்கிறாரா?” என்று பயந்து கேட்டான் கிருஷ்ணன்.

“இல்லை! உங்களுடைய கானத்துக்கு ஈடு எங்கிருக்க முடியும் ? நான் உண்மையைச் சொல்லுகிறேன், நீங்கள் மந்தையிலே மாடு மேய்ப்பவராக மாறுவேடத்திலே இருக்கிறீர், மதுசூதனரின் மறு அவதாரம் நீர் ” என்றாள். லீலாவின் கரத்திற்குப் பதில் குழல் ! அவளுடைய அதரத்திற்குப் பதிலாகக் குழலைத் தன் உதட்டிலே பொருத்தினான், கண்ணே, மணியே, காதல் கொண்டேன் என்று கூறுவதற்குப் பதிலாகக் குழலிலே சாரிபமகரிச நிதனிசாச என்று ஆரம்பித்தான்.

“கொஞ்சம் இதைக் கேளுங்கள் ” என்று கூறி ஆரம்பத்திலேயே கானத்தைக் கொலை செய்து விட்டாள் லீலா .

“அடுத்த ஊரிலே அமிர்தம் என்று ஒரு தாசி இருக்கிறாள், கொஞ்சம் படித்தவள். பெரிய கர்வம் பிடித்தவள். சங்கீதத்திலே மகா புலியாம் அவள்.எந்த வித்வானையும் மதிப்பதில்லையாம், அதிலும் குழல் வாசிப்பவர்களைக்