பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ண லீலா

25


கேவலப்படுத்துகிறாளாம். இவ்வளவு இனிமையான குழல் வித்வானான நீர் எப்படியாவது அவளுடைய கர்வத்தை அடக்கவேண்டும். தங்கள் வித்தையின் திறமைக்கு இது ஒரு பிரமாதமான காரியமல்ல. எப்படியாவது அவளை மயக்கி, அவள் வீட்டிலே தங்கிவிடவேண்டும். “அவள் தங்களிடம் காதல் கொண்டு கதறவேண்டும். அந்த வெற்றியை எனக்குக் கடிதமூலம் தெரிவிக்கவேண்டும். தங்கள் செலவுக்கு இந்தத் தொகை, நாழியாகிறது, நான் வருகிறேன். ஜெயத்தோடு திரும்பவேண்டும், யோசிக்க வேண்டாம்” என்று கூறி, ஒரு பணமுடிப்பைக் கிருஷ்ணனிடம் தந்துவிட்டு கடைக் கண்ணால் அவனைச் சித்திரவதை செய்து விட்டுச் சென்றாள் அந்த சிங்காரி, மறுக்கவோ நேரமில்லை, மனமுமில்லை. “உன்னைப் பலரும் புகழக் கேட்டால் அவள் மனம் - அதாவது நீ காதலிலே வெல்ல வேண்டுமென்று நினைக்கிறாயே அவளுடைய மனம்—உன்னிடம் வற்றாத, மாறாத காதலைச் சொரியும்” என்று அவன் படித்திருக்கிறான். எனவே தாசி அமிர்தத்தை வெற்றி கொள்ளச் சென்றான். ஜெமீன் வீட்டு லீலாவே. காதலால் தாக்குண்டபோது, இவள் எம்மாத்திரம் என்ற துணிவு பிறந்தது.

பாரிஸ்டர் நவநீதகிருஷ்ணனின் பிரேமாவதியாக இருந்த அமிர்தம் சங்கீதத்தில் பிரியம் கொண்டவள், வித்வான்களிடம் விசுவாசம் காட்டுபவள், பழய உருப்படிகள், புதிய மெட்டுகள், அபூர்வ இராகங்கள் ஆகியவற்றைக் கேட்டு ரசிப்பது, பாடங் கேட்பது, பாரிஸ்டர் பாதித் தூக்கத்திலே இருக்கும்போது, மஞ்சத்திலே படுத்தபடி மெல்லிய குரலிலே பாடி இன்புறுவது. கச்சேரிகளுக்குப் போகக் கூடாது என்பது பாரிஸ்டரின் கடுமையான உத்திரவு. ரிஜிஸ்டர் கலியாணம் செய்து கொள்ளப் போவதாக அவர் வாக்களித்திருந்தார். புதிதாக ஒரு வித்வான் வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அமிர்தம், அவருடைய கச்சேரியைக் கேட்க ஆவலானாள். ஊரிலே, வேறு யாரும் கச்சேரி ஏற்பாடு செய்யாமற்போகவே, பஜனைக்