பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ள்ளியின் ‘ஆலோலம்’ அந்தக் காட்டுக்கே ஓர் கீதம்; பறவைகள் அதைக் கேட்டு இன்புறவே தினைப்புனம் வரும். கதிர்களைக் கொத்துவது போல் பாசாங்கு செய்யும். வள்ளி கவணை வீசிச் சோ! சோ! என்று பாட்டிசைத்ததும், பறவைகள் தம்மை மறந்து, மரக்கிளைகளிலே அமர்ந்து இன்புறும். கீதம் நின்றால், ‘ஒன்ஸ் மோர்’ கேட்பதுபோல், மீண்டும் தினையைத் தின்ன வரும்! மீண்டும் வள்ளியின் சங்கீத வாய்மொழி ஆரம்பமாகும். வேட்டையாடச் செல்லும் வீரர்கள், கொஞ்ச நேரம் வள்ளியின் விருந்தை அனுபவித்து விட்டுத்தான் போவார்கள்.

வரகவி சோமசுந்தரர், வள்ளி கலியாண காலட்சேபத்திலே மகா திறமைசாலி! வள்ளி, அன்று எண்ணாதனவெல்லாம் இவர் கூறுவார். வேலன் அன்று பேசாததை இவர் செப்புவார். பாட்டும் சுவையாக இருக்கும். மக்கள் அவருடைய காலட்சேபத்தைக் கேட்டு மிக மகிழ்வர். அன்று அவர், ஆறுமுகம் பிள்ளையின் வீட்டிலே நடந்த திருமணத்திலே, வள்ளி கலியாணத்தை விமரிசையாக நடத்திக்கொண்டிருக்கையிலே, வள்ளி எனும் ஓர் வனிதை, – குறக் குலம் பெண்ணல்ல, பிள்ளைவாள் வீட்டு பந்து, – கேட்டு இன்புற்றாள். பிறகு தாகவிடாய் தீர்ந்ததடி ,