பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அண்ணாவின் ஆறு கதைகள்


தத்தையே! என் மோக விடாய் தீர்க்காயோ தத்தையே! என்று விருத்த வேலர் கேட்ட பகுதியும், அவர் ஆணை வைத்த பகுதியும், பின்னர் மணந்ததுமாகிய பகுதிகளைக் காலட்சேபக்காரர் மிக ரசமாகக் கூறினார். வள்ளி அதனைக் கேட்டுக் களித்தாள். விடியற்காலை மூன்று மணிவரையிலே தூக்கம் வராமல் வீட்டின் மூன்றாவது கட்டிலிலே, படுத்துப் புரண்டுகொண்டிருந்தாள். காலட்சேபக்காரரின் குறட்டை சங்கீதமாகவும், கொசுவை விரட்ட அவர் தட்டிக்கொண்டிருந்த சத்தம் தாளமாகவும் இருந்தது. மற்றவர்களும் உறங்கிக் கொண்டிருந்தனர். வள்ளியின் கண் மூடவில்லை, கருத்தும் தூங்க மறுத்தது.

“வள்ளிக் கணவன் பேரை
வழிப்போக்கன் சொன்னாலும்”

என்ற கிளிக்கண்ணியை எவ்வளவு அருமையாகப் பாடினார், கிழவர் நடப்பதை எப்படித் தள்ளாடித் தள்ளாடி நடந்து காட்டினார் என்று காலட்சேபக்காரரின் திறமைகளை வியந்தவண்ணம் வள்ளி, புரண்டு கொண்டிருந்தாள். காலடிச் சத்தம் கேட்டது திடுக்கிட்டு யார் என்று பார்க்க, காலையிலே மணமான மாப்பிள்ளை நிற்கக் கண்டு, கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்தாள். மாப்பிள்ளை ‘வள்ளித் திருமணம்’ நடக்கும் போதே வள்ளியைத்தான் பார்த்துக்கொண்டே இருந்தான். நெடுநாட்களாகவே வள்ளியை அவன் உள்ளத்திலே வைத்துக் கொண்டிருந்தான். அவனுக்குத்தான் இந்த வள்ளியைக் கட்டுவதாக, ஆறுமுகம் பிள்ளை முதலிலே நினைத்தார். ஆனால் வள்ளி, ஏழை வீட்டுப் பெண் மூன்றாவது கட்டு, பெரிய இடமாகக் கிடைக்கவே மாப்பிள்ளையின் தகப்பனார், வள்ளி திருமணத்திற்கு ஒப்பவில்லை. சாவித்திரி கலியாணம் நடந்தது. சகல சம்பத்துகளுடனும் சாவித்திரி, அன்று காலையில், சிங்கார வேலனைத் திருமணம் செய்துகொண்டாள். அன்று இரவே வேலன், வள்ளியைத் தேடிக்கொண்டு, மூன்றாவது கட்டுக்கு வந்து நின்றான். அங்கு படுத்திருந்தவர்களைச் சாடையாகப்