பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அண்ணாவின் ஆறு கதைகள்


பூரித்தான். உள்ளே தூங்கிய வள்ளி மட்டும், விளக்கெடுத்துக் கொண்டு படுத்திருந்தவர்களை பார்த்திருந்தால், உண்மையான அத்தை உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம்! அவள் சத்தியம் செய்தாகிவிட்டது! இனி பழனியே கணவன் என்று தூங்கிக்கொண்டிருந்தாள்.

பொழுது விடிந்ததும், மாப்பிள்ளை வள்ளியின் முகத்தைக் கண்டு வெட்கமடைந்தான். பழனியின் முகத்தைக் கண்டு வள்ளி நாண மடைந்தாள். அந்த பந்தலிலேயே, வள்ளி திருமணத்துக்கு நிச்சய தாம்பூலம் மாற்றிக்கொள்ளப்பட்டது, பழனி தன் தாயாரிடம் நாடகம் பலித்ததைக் கூறினான். மறுமாதம் வள்ளி கலியாணம் நடந்தது.