பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாமா விஜயம்

43


கும் சப்தம் கேட்டது. உற்றுக் கேட்டார். ஆம்! சந்தேகமில்லை. தன் மகள் கமலாவின் சிரிப்புதான். இதுவரை கமலா அப்படி சிரித்ததை அவர் கேட்டதில்லை; விதவைக்கு, சிரிப்பும் களிப்பும் ஏது?

“கண்ணே பாமா, நான் இன்றே பாக்கியசாலியானேன். உன்னை நான் என்றும் மறவேன்” என்றாள் கமலம்.

“என்னை மறந்தாலும் மறப்பாய் கமலா!’ எதுகுலகாம் போதியை மறப்பாயோ” என்றாள் பாமா.

“போ, பாமா உனக்கு எப்போதும் கேலி செய்வதுதான் வேலை. எங்களவர் ‘எதுகுல காம்போதி’ ஆலாபனம் செய்வதை ஒரு முறை கேட்ட யார் தான் மறந்து விடுவார்கள்?” என்றாள் கமலா.

“பிளேட்டிலே கொடுத்துவிடச் சொல்லு. அவர் வெளியிலே போய்விட்டாலும் நீ போட்டுக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்” என்றாள் பாமா.

பக்கத்து அறையிலே இருந்த சாஸ்திரியாருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நட்சத்திர பலன், நாழிகைக் கணக்கு, தர்ப்பையின் மகிமை தெரியுமே தவிர 'எதுகுல காம்போதி என்ன தெரியும் சாஸ்திரியாருக்கு?

என்னடா சனியன், எதுகுல காம்போதி. எங்களவர் கிராமபோன் பிளேட் என்று எதை எதையோ குட்டிகள் பேசுகின்றனவே என்று எண்ணித் திகைத்தார்.

“பாமா! என் விஷயம் எல்லாப் பேப்பரிலுமா போட்டு விடுவார்கள்?” என்று கேட்டாள் கமலம். “தடையில்லாமல்! பலான சாஸ்திரியின் மகள் ஶ்ரீமதி கமலத்திற்கும், சிவன் கோயில் நாதஸ்வர வித்வான் சுப்பிரமணியப் பிள்ளைக்கும் சீர்திருத்த மணம், ஶ்ரீமதி பாமாவின் முயற்சியால் இனிது நடந்தேறியது. அதில் ஜில்லா முன்சீப் தோழர் கதிரேசன் அவர்கள் தலைமை வகித்தார்’ எனக் கொட்டை எழுத்தில் போட்டோவுடன் வெளிவரும்”