பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அண்ணாவின் ஆறு கதைகள்“நீ செய்வது எனக்கொன்றும் பிடிக்கவேயில்லை. குலத்தைக் கோத்திரத்தை எல்லாம் கெடுக்கிறாய்” என்றாள் தாய்.

“எதைக் கெடுத்தேனும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பது தானே அம்மா உன் ஆசை” என்று கொஞ்சினாள் பாமா.

தாயாரால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. “போடி பொல்லாத சிறுக்கி, நீ எப்படியோ சுகமாக இரு! பார்த்து மகிழ்கிறேன் நான்” என்று கூறினாள் தாயார்.