பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றவாளி யார்?

61


வராது. நான் இருக்கிறேன், பயப்படாதே’ என்று ஏறக்குறைய ஒரு மாதம் தைரியம் ஊட்டினீரே, அதனாலேதான் முதன்முறை என் கையைப் பிடித்து இழுத்தீரே, கத்தரித் தோட்டத்தில் அப்போது பயத்தால் வெட வெட என்று உதறிய நான், இன்று, உன் அண்ணன் எதிரே கல் சிலை போல நின்றேன்–கல்போலப் பேசாமலில்லை–பேசினேன்.”

“அண்ணன் என்ன சொன்னார்?” — “என்ன சொல்வார் ?”

“உயிரை வாங்காதே! நடந்ததைக் கூறு.” — ‘விபசாரி தானா’ என்று கேட்டார் — கேட்க......”

“தன் தம்பியால் விபசாரியாக்கப்பட்ட என்னை, அவர் தைரியமாக அந்தக் கேள்வி கேட்கவே, நான் கோபங் கொண்டு, ‘ஆமாம்! விபசாரிதான்! ஏன் விபசாரியானேன் என்று கேட்கிறீர்களா?’ என்று கேட்டேன்.”

“அடி பாதகி! நீயாகவா அவர் வாயைக் கிளறினாய்?”

“ஆமாம்! உன் அண்ணன் ஊமையானார் !”

“அப்பா! தப்பினேன்! அவர் ‘ஏன் விபசாரியானாய்? யாரால் நேரிட்டது?’ என்று கேட்டுவிட்டிருந்தால், என் கதி என்ன ஆவது? நான் தான் இதற்குக் காரணம் என்று கூறிவிட்டிருப்பாயல்லவா?”

“இல்லை! நான் அதைக் கூறியிருக்கமாட்டேன்.”

“அப்பா! பாதிப் பிராணன் வந்தது. என்னை எங்கே காட்டிக் கொடுத்து விடுகிறாயோ என்று பயந்தேன்.”

“உன்னை ஏன் காட்டிக்கொடுக்கப்போகிறேன் ! பைத்யம்! நீ, முதல் குற்றவாளி அல்ல! இரண்டாம் நம்பர் ! உன் இச்சைக்கு நான் இறையாவதற்கு முன்பே......”