பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அண்ணாவின் ஆறு கதைகள்



.. ‘முன்பே ...? — முன்பே ......’

‘கள்ளி! கத்தரித் தோட்டத்திலே பத்தினி வேஷ மிட்டாயே! அதற்கு முன்பே கைகாரிதானா நீ? கழுதே! எவன் அந்தப் பயல்?

‘உன்னைவிடப் பெரியவர் வயதில்.......வயதில் மட்டுமல்ல அனுபவம், சாமர்த்தியம், அந்தஸ்து, படிப்பு சகலத்திலும். முட்டாளே! நான் உனக்கு கூத்தியாவதற்கு முன்பு, உன் அண்ணியாக இருந்தேன் — அதே தினத்திலே, உன்னைக் காணுமுன்பு — நீ கத்தரித் தோட்டத்தைக் காமக்கூத்தாடத்தக்க இடம் என்று எண்ணினாய் — உன் அண்ணன், காளி கோயில் பாழ் மண்டபமே போதும் என்றார்! நான் அலுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன் அங்கு. காலைக் கும்பிட்டுக் கூடப் பார்த்தேன் ; தட்டி எழுப்பிக் கட்டிப் பிடித்தபோது......’

‘என் அண்ணனா !—.

‘ஏன்? அவனும் ஒரு ஆடவன்தானே! அதிலும் ஊருக்குப் பெரியவன் — ஏழைகளை விசாரித்துத் தண்டிக்க அதிகாரம் படைத்தவன்! நான் ஏழை, விதவை, பிறகு இரையாகத்தானே வேண்டும், உன் அண்ணன் போன்ற காட்டு ராஜாவுக்கு!’

‘என்னால் நம்பவே முடியவில்லையே......’

‘நம்பிக்கை பிறக்கப் போய்க் கேள் உன் அண்ணனை. தைரியமிருந்தால் நாளைய தினம் விசாரணையின் போது, நான் யாரால் விபசாரியானேன் என்பதைக் கூறும்படி என்னையே கேட்கச்சொல்லு. வெட்டவெளிச்சமாக்கி விடுகிறேன் உங்கள் யோக்கியதை பூராவையும், வேலனும் நானும், வெளியூர் ஓடிவிடப் பிரயத்தனப்பட்டோம் என்று குற்றம் சாட்டி விசாரிக்கத் துணிந்தார் உன் அண்ணன். வேலன், குற்றம் செய்த என்னை — கொடுமைக்கு ஆளான என்னை — காப்பாற்ற, காளிமீது ஆணையிட்டுக் கைபிடித்-