பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அண்ணாவின் ஆறு கதைகள்



“அதுதாண்டா மண்டு! அதுதான்.”

மாமனும் மருமானும் அப்படித்தான் வேடிக்கையாகப் பேசிக் கொள்வது வழக்கம். எங்கேயும் என்று சொல்லவில்லை. ராகவாச்சாரியார் ‘ஆத்திலே’ அப்படித்தான் வழக்கம்.

“ஏண்டி! இன்னிக்கி நம்ம ருக்கு பலேபேஷா இருக்காளே. ஆத்துக்காரன் பார்த்தானானா, மயக்கமடிச்சி விழுந்துடுவன்” என்று ராகவாச்சாரியார், தன் குமாரி ருக்குவைப் பற்றிச் சகதர்மிணி சாந்தாவிடம் பேசுவார். ருக்குவையேக் கூடக் கேட்பார் சில சமயம், “என்னடி அது தாடையைத் தடவிண்டு நிற்கறே. சுந்தரம், கடிச்சுட்டானா?” என்று. சுந்தரம், ருக்குவின் புருஷன், அவன் “மாமனார் ஆடற விளையாட்டைப்போல நேக்குத் தெரியாதே” என்று மாமனாரிடம் வேடிக்கையாகத்தான் பேசுவான்.

“மண்டு” அதாவது மற்றோர் மருமான், உறவின் முறை பெண் கொடுத்து ஊர்ஜிதம் செய்யவில்லை, பெண் வேறே இல்லாததால் வேலை வாங்கித் தருவதாக, வர வழைத்திருந்தார். வரதனை. அவனுக்குத்தான் அந்த ‘மண்டு’ பட்டம்.

மண்டு, லெடர் பேபருடன் வந்து உட்கார்ந்தான். எழுதுவதற்கு, ஐயர், துவக்கினார்.

“சீமான் திவான்பகதூர் தீர்த்தகிரி முதலியாரவர்களுக்கு,” என்று கூறினார், மண்டு மளமளவென்று எழுதி “களுக்கு” என்று கூறினான், “டே! ஶ்ரீராமஜெயம் போட்டாயா?” என்று கேட்டார், ராகவாச்சாரியார். “இல்லையே! சொல்லலையே!” என்றான், மண்டு, “போடா இதைக் கூடச் சொல்வாளாக்கும்” என்றார், அதையும் எழுதிவிட்டு, மேலே கூறச்சொன்னான், “முதலியாரவர்களுக்குச், சர்வமங்களானி இஷ்ட சித்திரஸ்து” என்று கூறினார் ராகவாச்சாரியார், மண்டு. எழுதிக் கொண்டிருக்கையில் ராகவாச்சாரி, “அவன் இஷ்டம் என்ன, தெரியுமோ, ஊர்த்தாலியை அறுக்கணும். திவான் பகதூர்