பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அண்ணாவின் ஆறு கதைகள்


நாகரிகச் சுருக்கமாக, பையன் ஆர். பி. நாதன் என்றுதான் எழுதுவது வழக்கம். விஷயம் அவ்வளவு பிரமாதமில்லை என்று, மண்டு தள்ளிவிட்டான். “மேலே சொல்லுங்க மாமா!” என்று கூறினான். “பஞ்சுவுக்குக் காலேஜ் செலவுக்குத் தருவதற்கு, நான் படுகிற சிரமம் இருக்கே. அது சாட்சாத் ஶ்ரீராமச்சந்திரமூர்த்திக்குத்தான் தெரியும்” என்றார் ராகவாச்சாரி. ‘உம்’ போட்டான் மண்டு, எழுதிக்கொண்டே “அதிலும் இந்த மாதம், ராமபக்தசபா வருஷாப்திக்காகச் செலவு ஏராளமாகப் பிடிச்சுவிட்டது” என்றார்; எழுதினான். அந்த வருஷ விழா சாக்கிலே வாங்கின திராட்சையும், பாதமும், முந்திரியும், பருப்பும், வேட்டியும், வெள்ளி வட்டிலும், வேறு பலப்பல சாமான்களும், வீட்டிலே எங்கெங்கும் உள்ளன என்பது மண்டுவுக்குத் தெரியும்! தெரிந்து என்ன செய்வது; ராகவாச்சாரி சொல்கிறபடி எழுதத்தானே வேண்டும்! ‘ஆகையாலே, என் மீது ரொம்பத் தயவு வைத்து, பையனிடம் ஒரு ஐம்பது ரூபாய் தரவேணும்’ என்றார். “ஐம்பதா?” என்று ஒரு முறை கேட்டுக்கொண்டான் மண்டு. ஏனெனில் அவனுக்குச் சந்தேகம், பஞ்சநாதனுக்குப் பணம் தேவையா என்பதிலேயே. “ரேடியோ” நாடகத்திலே நடித்ததற்காக, பஞ்சநாதனுக்குக் கிடைத்த இருபது ரூபாயைக்கூட அவன் அப்பாவுக்கு மணியார்டர் செய்திருந்தான், அந்தச் சந்தோஷத்திலே, பகவானுக்கு அக்ராவடசல் கூடச் செய்தார்கள். அப்படி இருக்க ஐம்பது ரூபாய் எதற்காகப் பஞ்சுக்கு, என்று சந்தேகம். “ஆமாம், ஐம்பதுதான் முட்டாளே, அவ்வளவு பெரிய ஆசாமியிடம் ஐந்து பத்துத் தான் கேழ்ப்பாளோ? நாமென்ன அவன் ஆத்திலே வண்டி ஓட்டறவாளா?” என்று விளக்கம் உரைத்தார் ராகவாச்சாரி. “இந்த ஐம்பது இந்தச் சமயம் எனக்கு ஐந்நூறுக்குச் சமானம்” என்று கூறினார் ராகவாச்சாரி. மண்டுவுக்கு இதுவும் புரியவில்லை. ராகவாச்சாரியின் அண்ணன் உள்ளூர்ப் புரோகிதர். அவர் எந்த வீட்டில் எவ்வளவு கொடுத்தாலும், கொடுத்தது கொஞ்சமாக இருந்தாலும் இதையே அதிகமாக எண்ணிக்கொள்ள