பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அண்ணாவின் ஆறு கதைகள்


முக்கிய காரணம்! கிருஷ்ணன் மந்தை மன்னனான பிறகு, பட்டியிலே பல மாறுதல்கள்! மாடுகளுக்கெல்லாம் அவன் வருவதற்கு முன்பு, வளைந்தகொம்பன், வால்மொட்டை, மைக்கண்ணி, அரணைவாலான் என்று அநாகரிகப் பெயர்கள் இருந்தன. கிருஷ்ணன் பதவியிலே அமர்ந்த உடனே செய்த முதல் சீர்திருத்தம், பழைய பெயர்களை ஒழித்துவிட்டு, அழகாகச் சுகுணா, சுந்தரி, கோமளம், கோமதி என்ற புதிய பெயர்களை மாடுகளுக்குச் சூட்டியதுதான்! அவன் செய்த வேறு பல சீர்திருத்தங்களிலே ஒன்று, பிரதி சனிக்கிழமையும், மாட்டுப் பட்டியிலே, பாட்டுக் கச்சேரி நடத்துவது. இந்த விசித்திர சித்தனைப் பற்றி ஊரிலே வேடிக்கையாகப் பேசிக்கொள்வார்கள். அவன் கவலைப்படுவதில்லை. எந்தத் தொழிலானால் என்ன? மாடு மேய்ப்பவன், என்று. ஏன் அந்தத் தொழிலைப்பற்றி இழிவாகக் கூறவேண்டும்! மந்தை மன்னன்! என்று நான் கூறுவேன். அது சாதாரணமான, கேவலமான தொழிலல்ல. மகேசுவரனே, பசுக்களாகிய நமக்குப் பதியாக இருக்கிறார் என்று சைவசாத்திரம் கூறுகிறது, அரியின் அவதாரமான கிருஷ்ணன், மாடு மேய்ப்பவனாக இருந்தார். மாடுகளின் பொருட்டு மக்களின் மண்டை உடைந்த கதைகள் உண்டு, என்று கூறுவான்.

படித்த பயல் ஏன் இந்த வேலைக்கு வந்தான் என்று சிலர் அவனைக் கேட்டதுண்டு. கிருஷ்ணன், கோபப்படாமல், அவர்களுக்குப் பதில் கூறுவான், நான் படித்தவன் என்பது உண்மை! ஆகையினால்தான், இந்த வேலைக்கு வந்தேன் என்பான்.

“இந்தக் காலத்திலேதான் படித்தவர்களுக்கெல்லாம் ரொம்ப திண்டாட்டமாமே? வேலையே கிடைப்பதில்லையாமே! அதனாலேதான் பாவம் இந்தப் பிள்ளையாண்டான், ஜெமீனில் மாடு மேய்த்தாவது பிழைப்போம் என்று வந்திருக்கிறான். ஜெமீன்தாருக்கு யாராவது, இவன் படித்தவன் என்று நாலு நல்ல வார்த்தை சொன்னால்