பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்வதை எழுதேண்டா!

71


அவனுக்குக் கிடைச்சதுக்கே, அதுதான் காரணம்னு சொல்லி வைச்சிருக்கேன். சமயம் வாய்ச்சா நீயும் சொல்லு. எப்படியும் பணத்தை வாங்கிவிடு, அசடாட்டம் இருந்து விடாதே.”

இது மகனுக்குத் தகப்பனார் அனுப்பும் கடிதம். இதனைச் சிரமமின்றி மண்டு எழுதிவிட்டான், குறுக்குக் கேள்வியே கேட்காமல். ராகவாச்சாரியாரின் “முறை”யைப் புரிந்து கொண்டான்.

“அடடே! மறந்துவிட்டேன், இன்னும் ஒருவரி ‘சேர்க்கணும் பஞ்சு லெடரில்’ என்று சொன்னார் ராகவாச்சாரி “சொல்லுமே, இடம் இருக்கு” என்றான் மண்டு. “தீர்த்தகிரி வீட்டுக்குப் போகும் போது, கொஞ்சம் உலர்ந்த உதிரி புஸ்பமும் மஞ்சத்தூளும் ஒரு காகிதப் பொட்டலத்தில் மடித்து எடுத்துக் கொண்டு போய், அப்பா ஊரிலிருந்து அனுப்பினார் என்று கொடு” என்று, கூறிக் கடிதத்தைப் பூர்த்தி செய்தார்.

ராகவாச்சாரியாரின் தபால்கள் பயணப்பட்டன. பெங்கால் சில்க் சேலையைப் பற்றிய நினைப்புடன் ருக்கு. நடை பழக ஆரம்பித்தாள், அதுவே ஒரு புது தினுசு டான்சாக இருந்தது. தபால்கள் போய்ச் சேர்ந்தன, ஆனால் முதலியாருக்குச் சேரவேண்டிய கடிதம் பஞ்சுவுக்கும், பஞ்சுவுக்குச் சேர வேண்டிய கடிதம் முதலியாருக்கும் போய்ச் சேர்ந்தன. பெங்கால் சில்க்கா கிடைக்கும்,? திவான் பகதூர் தீர்த்தகிரி முதலியார், ராகவாச்சாரியாரை, “அயோக்யன்? நன்றி கெட்டவன்! நயவஞ்சகன் ! அவனை என்ன செய்கிறேன் பார்” என்று ஏசி, பஞ்சுவையும் உதைப்பதாக மிரட்டியதையும் பற்றி விரிவாக எழுதி, முதலியார் விலாசமிட்ட கவரில், பஞ்சுவுக்கு எழுதிய கடிதத்தையும், பஞ்சுவுக்கு அனுப்பிய கவரில், முதலியாருக்கு எழுதிய கடிதத்தையும், மண்டு கைதவறி வைத்து அனுப்பிவிட்டதால் நேரிட்ட விபரீதத்தையும் விளக்கி, பஞ்சு தகப்பனாருக்கு விரிவாகக் கடிதம் எழுதினபிறகே, மண்டுவால் வந்த ஆபத்தை ராகவாச்சாரி உணர்ந்து சோகித்தார்.