உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

எடுத்துக்காட்டினார்கள். நண்பர் ஏழுமலை அவர்களும் அந்தப் பகுதிகளுக்கு அவர்கள்கூட வந்திருந்தார்கள். நான் திம்மசமுத்திரத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறேன். நீங்கள் இதுகாறும் ஆதித்திராவிட மக்களை சேற்றில் அழுத்தி கொடுமையில் வைத்திருக்கவில்ல என்றால், நான் அவ்வாறு கருதமாட்டேன். இதுதான் இவைககளுக்குக் காரணமே தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது, இவ்வளவு நாட்களாக உங்களுடைய கவனம் எங்கே செலுத்தப் பட்டிருந்தது. அந்தப் பகுதிகளில் ஏன் உங்கள் கவனத்தைச் செலுத்தாமல் இருந்திருக்கிறீர்கள். அவர்கள் எல்லாம் காந்தீயத்தின் அடிப்படையிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தானே. நீங்கள் வேண்டுமானால் காந்தீயத்திற்குப் புறம்பாகப் போவீர்கள். சுவாமி சகஜானந்தா போன்றவர்கள் காந்தீயத்திலிருந்து விலகிப் போக மாட்டார்கள். 2735 வீடுகள் எரிந்து போய்விட்டன். வீடு ஒன்றுக்கு 30 ரூபாய் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இப்பொழுது 100 ரூபாய் கொடுக்கப்பட்டதாக போலீஸ் அமைச்சர் அவர்கள் கூறினார்கள். அவைகள் மாத்திரம் போதுமா என்று கேட்கின்றேன், நாம் பேச வேண்டியவைகளை எல்லாம் அந்தப் பகுதியில் போய்ப் பேசி இருக்க வேண்டும். இந்தச் சட்டசபைக் கூட்டத்தையே பரமக்குடியில் நடத்தி இருக்கலாம். இவைகள் எல்லாம் அந்த நாட்டில் இருக்கின்ற மக்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். அதற்காகத்தான் இவைகளைச் சொல்லுகின்றேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. அமைச்சர்கள் ஏன் அந்தப் பகுதிகளுக்குப் போகவில்லை என்று தோழர் சின்னத்துரை அவர்கள் கேட்டதற்கு இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று அமைச்சர் அவர்கள் கேட்டார்கள். நாங்கள் எல்லாம் போய் என்ன செய்ய முடியும்? நாங்கள் போக வேண்டும், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டபோது கலகம் வரட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னீர்கள். பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கின்ற நேரத்தில் எல்லாம் அமளிகள் வரட்டும், வந்தால் அவர்கள் அடக்கிக் கொள்வார்கள் என்று சொல்லுகின்றீர்கள். எனவே எதிர்க்கட்சிக்காரர்கள் போய் ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் போய் இருக்கவேண்டுமென்று சின்னத்துரை அவர்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் ஏதோ உணர்ச்சி வயப்பட்டு கேட்டார்களே தவிர, உங்களைப் புண்படுத்தவேண்டுமென்ற நோக்கத்தோடு அல்ல. புயல்அடித்த நேரத்தில்