101
எல்லாம் அந்தப் பகுதிகளுக்குப் போயிருந்தால் வோட்டு கிடைத்திருக்கும். நமது போலீஸ் அமைச்சர் அவர்கள் எனக்கு முன்பே அரசியலில் நீண்டகாலமாக அனுபவம் பெற்றிருப்பவர்கள் என்று நினைக்கின்றேன் என்னுடைய தந்தை அரசியலில் ஈடுபட்டிருந்த காலத்திலேயிருந்து ஈடுபட்டிருக்கக்கூடியவர். அவருடைய மகனுடைய வயதிற்குத்தான் நான் இருப்பேன். மகன் இருக்கிறாரோ இல்லையோ எனக்குத் தெரியாது.
நிதி அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் : மகன் இருக்கிறார்.
திரு. சி. என். அண்ணாதுரை : இருக்கிறார் என்றால் மகிழ்ச்சி. எனவே வோட்டு வாங்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் புயல் அடித்த நேரத்தில் எல்லாம் அங்கு போயிருக்க வேண்டும். ஆனால் இப்போதல்ல அதற்குக் காலம். இப்போது தன்னைச் சுற்றி ஆட்களை வைத்துக்கொண்டு அடிபடாமல் திரும்பி வந்தாலே போதும். பல்கலைக் கழகப் பக்கம் திரும்பாவிட்டாலும் கூட, இந்நாட்டு மக்களை, இந்த நாட்டு அரசியலை நன்றாக நிர்ணயித்து வைத்திருக்கிற நமது முதலமைச்சர் அவர்கள், புயல் அடிக்கிற நேரம் பார்த்து அங்கு போனார்கள். எந்த இடங்களுக்கு எந்த நேரத்தில் போனால் வோட்டு கிடைக்கும், எந்த நேரத்தில் போனால் வேட்டு கிடைக்கும், எப்போது வோட்டு, எப்போது வேட்டு என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் (கை தட்டல். ஆரவாரம்). அவர்கள் இதை எல்லாம் நன்கு அறிந்திருக்கின்றார்கள். எவ்விதமிருந்தாலும் இந்தப் பகுதிகளில் எல்லாம் நீங்கள் போக வேண்டிய நேரங்களில் போகவில்லை என்றுதான் நாங்கள் உங்களை குற்றம் சாட்டுகிறோம். ஆகவே உங்களிடம் ஒரு துளி மாசு இருந்தாலும் கூட அதை நீக்கிக் கொள்ள வேண்டும். பாகவதம். இராமாயணம் இவைகளைப் பற்றி நமது போலீஸ் ஆமைச்சர் அவர்களுக்கு நிரம்ப நம்பிக்கை உண்டு என்று நம்புகிறேன். யாரோ ஊரில் ஒருவன் உத்தம சீதை களங்கப்பட்டிருக்கிறாள் என்று சொன்னதற்காக உத்தம சீதை நெருப்பில் இறங்க வேண்டுமென்ற கடும் சோதனையை இராமபிரான் நடத்தினதை இராமாயாணத்தில் நீங்கள் படித்திருக்கின்றீர்கள். அந்த நேரத்திலும் சீதை ராமனுக்கு கிடைக்கவில்லை. பூமி பிளந்து உள்ளே போய் விடுகின்றாள். எங்கோ ஒருவன் சொன்ன குற்றத்திற்காக ஒரு சக்கரவர்த்தியே இவ்விதம் பரிசோதனை நடத்திருக்கிறார் என்றால் எவ்வளவோ ஆசாபாசங்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் இருக்கும் நீங்கள், அதுவும் எங்களைப் போன்ற ஆட்களையும்
13